×

கரூர்-ஈரோடு சாலை சென்டர்மீடியனில் மின்கம்பங்களை பதிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், பிப். 8: கரூர் நகராட்சிக்குட்பட்ட ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதி வரை சாலையின் மையத்தில் சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் மைய பகுதியில் மின்கம்பம் அமைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் எளிதாக சாலையில் செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : road center median ,Karur-Erodu ,
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...