×

கே.வி.குப்பம் சந்தையில் ஆடுகளின் விற்பனை அதிகரிப்பு

கே.வி.குப்பம்: கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, திங்கட்கிழமையான இன்று காலை சந்தை வழக்கம்போல் கூடியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டு ஆடுகளை வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது.

குறிப்பாக வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், செம்மறி ஆடுகள் என பல்வேறு ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த வாரங்களில் சற்று மந்தமாகவே நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. ரம்ஜான் நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் ஒரு ஆடு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை கூடுதலாகவும் இரட்டிப்பாகவும் விற்கப்பட்டதால் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : K.V.Kuppam ,K.V.Kuppam. ,Vellore district ,Karnataka ,Andhra Pradesh ,
× RELATED அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்...