×

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம். இந்த தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் : மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

சென்னை: திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம். இந்த தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு சார்ந்த பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று மனிதநேய மக்கள் கட்சி உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா,“சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எனவே இந்த முறை மனிதநேய மக்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான். அதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச் சொல்வதாக தெரிவித்துள்ளனர். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்தத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.” என்று தெரிவித்தார்.

Tags : Thimuk ,Mamaka ,Jawahirullah ,Chennai ,Jawahirulla ,Humanist People's Party ,Tamil Nadu Assembly ,Dimuka ,
× RELATED எடப்பாடி பழனிசாமி தற்போது தோல்வி...