×

காங்கிரசுக்கு ரூ.1,000 கோடி நிதி திரட்டி தருவோம்: தெலங்கானா முதல்வரின் பேச்சால் சர்ச்சை

ஐதராபாத்: தெலங்கானா மாநில அரசு மக்களின் வரிப்பணத்தை காங்கிரஸ் மேலிடத்திற்காக பயன்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ேநற்று முன்தினம் நடந்த கட்சி நிர்வாகிகள் பயிற்சி முகாமில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, ‘சோனியா காந்தி குடும்பத்தினர் மீது சுமத்தப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் பொய்யானவை.

அவர்களுக்கு தேவைப்பட்டால் எங்களால் 1,000 கோடி ரூபாய் நிதி திரட்டித் தர முடியும். நாட்டின் நலனுக்காக உழைக்கும் அவர்களுக்கு எங்களது தொண்டர்கள் எப்போதும் துணையாக இருப்பார்கள்’ என்றார். முதல்வரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, மாநிலத்தின் வருவாயை டெல்லி மேலிடத்திற்கு கொண்டு செல்லும் ஏடிஎம் இயந்திரமாக தெலங்கானாவை முதல்வர் மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. மாநில நலனை புறக்கணித்து ஒரு குடும்பத்திற்காக முதல்வர் இவ்வாறு பேசியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என பிஆர்எஸ் கட்சியும் விமர்சித்துள்ளது.

Tags : CONGRESS ,Hyderabad ,BJP ,Telangana state government ,Telangana ,
× RELATED மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்க...