×

அந்தியூர் வாரச்சந்தையில் 2 நாட்களில் ரூ.1.20 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

அந்தியூர் : அந்தியூர் வாரச்சந்தை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முதன்மையான சந்தையாகும். இங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகை பொருட்கள் மட்டும் இன்றி வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கால்நடை சந்தை மில் விற்பனை பெரிய அளவில் நடைபெறும்.

இங்கு அந்தியூர் அதன் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, பர்கூர் மலைப்பகுதி மற்றும் கர்நாடகா மாநிலப்பகுதியில் இருந்து கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதில், கடந்த இரண்டு நாட்களாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

இதில், ஜெர்சி இன மாடுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரைக்கும், மலை மாடுகள் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.51 ஆயிரம் வரையிலும், நாட்டு இனமாடுகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.59 ஆயிரம் வரையிலும், எருமை மாடுகள் ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.51 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதனை விற்பனைக்காகவும், கால்நடைகளை வளர்ப்பதற்காகவும், இறைச்சிக்காகவும் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். கடந்த இரண்டு நாட்களில் அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ.1 கோடியே 20 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

Tags : Antyur Warachanda ,Antyur ,Erode district ,
× RELATED சென்னை மாவட்டத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியானது.