குற்றாலத்தில் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் பசும்பொன்னில் சசிகலா ஒரு கட்சி தொடங்குகிறார். அதில் ஓபிஎஸ் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஒரு பழி சுமந்து நிற்கிற பாத்திரம் அவர். எனது தொகுதி பத்மநாபபுரம். அதில் விஜய் நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
சசிகலா துவங்கும் கட்சி எங்களுடன் கூட்டணி வர வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இருந்தால் சாத்தியம். இப்படி ஒரு பாலிசியை பாஜ எடுக்கும் என்று நான் நம்பவில்லை. தவெக உடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு வராததற்கு காரணம் நாங்கள் எந்த கட்சியையும் விலைக்கு வாங்க தயாராக இல்லை. எங்களுடன் வரவேண்டும் என்று தாகமும் தவிப்பும் உள்ள கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார். அது இரண்டு நாளில் தெரியும்’ என்றார்.

