×

எப்படி இருந்த கட்சி இப்படி ஆயிடுச்சு; அதிமுகவைப் பற்றி திருமா வேதனை

மதுரை: மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பாஜவின் பிடிக்குள் போய்விட்டது. மெல்ல மெல்ல காவிமயமாகிறது. அதற்கு சான்றாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் திருவள்ளுவர் காவி அணிந்த பதிவு அமைந்திருக்கிறது. பெரியார் பாசறையில் தோன்றிய இயக்கம், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் இயங்கிய ஒரு திராவிட இயக்கம். சங்பரிவார்களின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது.

அதிமுக வெற்றி பெற்றால் ஆர்எஸ்எஸ்தான் ஆளும். திருவள்ளுவருக்கு காவி பூசும் அளவு எடப்பாடியின் பதிவு மாறியிருப்பது வேதனை அளிக்கிறது. அதிமுக தலைவர்கள் கவனமாக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் தமது சுய அடையாளத்தை இழக்க நேரிடும். திமுக கூட்டணி இப்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. தேமுதிக இந்த கூட்டணியில் இணைந்திருப்பதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. ஓபிஎஸ் தலைமையிலான அணியும் திமுக கூட்டணிக்கு வரும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்தால் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thiruma ,AIADMK ,Madurai ,VKC ,Thirumavalavan ,BJP ,Edappadi Palaniswami ,Thiruvalluvar ,Periyar ,
× RELATED பொள்ளாச்சியில் ரூ.9.89 கோடியில் புதிய...