×

கடமான் வேட்டையில் முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்ட வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

கூடலூர்,பிப்.8: ஓவேலியில் கடமான் வேட்டையில் முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்ட வனத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கூடலூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அவை தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் லியாக்கத்அலி வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனிமுன்னிலை ஆகியோர் வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளரகள் காந்தி செல்லதுரை,பாபு,பத்மாவதி,பேரூர் செயலாளர்கள் முருகையா,மாதேவ்,மாவட்ட பிரதிநிதிகள் சிரிராஜா,கணேசன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரும்மாறு: உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் தலையீடு செய்யும் அதிமுக அரசை கண்டித்து 10ம் தேதி ஊட்டியில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது, ஓவேலி ஆத்தூர் பகுதியில் மான் வேட்டையாடிய முக்கிய குற்றவாளிகளை தப்பவிட்ட வனத்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிப்பதோடு, திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Tags : meeting ,forest department ,executives ,DMK ,moose hunt ,
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!