×

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி சமரசம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடியின் துரோகம் தற்போது அம்பலமாகியுள்ளது. பிரதமர் மோடியால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது; மோடி மீண்டும் சரணடைவார். இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை ராகுல்காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில், அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்துவிட்டார்” பிரதமர் மோடி கலக்கம் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கி இருந்த இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட்டார். அவர் மீது கடும் அழுத்தம் உள்ளது. அவரது இமேஜ் சேதமடையலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார். பொதுமக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சமரசம் செய்து கொண்டதன் மூலம் பிரதமர் மோடி, மக்களின் கடின உழைப்பை விற்றுவிட்டார். நாட்டை அவர் விற்றுவிட்டார். நரேந்திர மோடி அச்சமடைந்துள்ளார். ஏனெனில், அவரது பிம்பத்தை வடிவமைத்தவர்களே இப்போது அதை உடைக்கிறார்கள்’’ என கூறினார்.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய விவசாயம் தொடர்பாக என்ன இருக்கிறது என்பதை அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதிகளை மேற்கொள்ளும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

நமது மொத்த இறக்குமதியே 700 பில்லியன் டாலர்தான். அப்படியானால், நாம் மற்ற நாடுகளில் இருந்து மேற்கொள்ளும் இறக்குமதிகளை நிறுத்தப் போகிறோமா? இந்த ஒப்பந்தம் தொடர்பான செய்தி நல்லதாக இருந்தால் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,US ,President Trump ,Rahul Gandhi ,Delhi ,Narendra Modi ,PM Modi ,United ,States ,
× RELATED பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு...