- 2026 சட்டமன்றத் தேர்தல்
- திமுகா!
- சென்னை
- பொது செயலாளர்
- Duraimurugan
- சட்டசபை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 6 பேர் கொண்ட குழு அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தகித்து வருகிறது. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை, பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு, புது வரவான தேமுதிகவையும் சேர்த்து சக்தி வாய்ந்த கூட்டணியை திமுக கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 6 பேர் கொண்ட குழு அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
