×

சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன தீ விபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

பெரம்பலூர்,பிப்.5: பெரம்பலூர் மாவட்டத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி காவல்துறை, வட் டார போக்குவரத்து அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தீயணைப்புத்துறை ஆகியவற்றின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் கோட்ட தீயணைப்புத்துறை சார்பாக தண்ணீர் பந்தல் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதற்கான தொடக்க விழாவிற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். இதில் பெரம்பலூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் கலந்து கொண்ட தீயணைப்புப்படை வீரர்கள், வாகனங்களில் எந்த விதங்களில் தீ விபத்து ஏற்படுகிறது. தீ விபத்து நேரும்போது வாகன ஓட்டுனர்கள் மட் டுமன்றி, வாகனங்களில் பயணிப்போர் எவ்வாறு தப்பிப்பது.
தீக்காயங்கள் நேர்ந்தாலோ உடலில் இதர காயங்கள் நேர்ந்தாலோ முதலுதவி சிகிச்சை அளிப்பது எவ்வாறு என்பது குறித்து செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. இதனை பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டுனர், பழகுனர் உரிமங்கள் பெற வந்தவர்களும், புதுப்பிக்க வந்தவர்களும், அலுவலக ஊழியர்களும், பயிற்சி பள்ளி உரிமையாளர்களும், வாகன ஓட்டுனர்களும் கண்டு பயனடைந்தனர்.

Tags : car fires ,
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய