×

பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்


திருப்பூர், பிப்.5:  பஞ்சு இறக்குமதிக்கு விதித்துள்ள வரியை, உடனடியாக நீக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: உள்நாட்டில் பஞ்சு விலை உயரும் போது இறக்குமதி பஞ்சு, தமிழக நூற்பாலைகளுக்கு கைகொடுக்கிறது. சில மாதங்களாக தமிழக நுாற்பாலைகள் நுால் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. புதிய ஆர்டர்களை பெறுவதும், பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிப்பதும் திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு சிரமத்தை தருகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பஞ்சுக்கு புதிதாக 5 சதவீதம் இறக்குமதி வரி, 5 சதவீதம் ‘செஸ்’ வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தமிழக நுாற்பாலைகளுக்கு பஞ்சு இறக்குமதியில் சிக்கலை ஏற்படுத்துகிறது. நூல் விலையை கட்டுப்படுத்த ஆடை உற்பத்தி துறையினர் முயன்று வருகின்றனர். எனவே, மத்திய அரசு பஞ்சுக்கு விதித்துள்ள இறக்குமதி வரியை உடனடியாக நீக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED மழை வேண்டி பிரார்த்தனை; அரசு – வேம்புக்கு திருமணம்