×

உன்னத திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி கேரள மாணவன் கடிதம்

சென்னை: கேரள மாநிலம், கொல்லத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் துர்கா ரஞ்சித், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி கடிதம் எழுதியள்ளார். அக்கடிதத்தில், தனது தந்தையின் கண் அறுவை சிகிச்சைக்காக தந்தையும், தாயும் மதுரைக்கு வந்ததாகவும், அப்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவச பேருந்து வசதி என்ற முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து தன்னிடம் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருவது கேட்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். அதற்காக தனது மனமார்ந்த பாராட்டுகளை முதல்வருக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்நாட்டு மக்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் முதல்வர் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவது அறிந்து தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அம்மாணவனின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள முதல்வர் அம்மாணவனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து, “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பையும் அனுப்பியுள்ளார்.

Tags : Kerala ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Durga Ranjith ,Kollam, Kerala ,Tamil Nadu ,Madurai ,
× RELATED எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப்...