×

மிஷ்னரி ஹில் பகுதியில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

ஊட்டி,பிப்.5: ஊட்டி மிஷனரி பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. இதற்கு பதிலாக தூய்மை பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். ஆனால், ஒரு சில பகுதிகளுக்கு தூய்மைப் பணியாளர்கள் செல்லாத நிலையில், சாலையோரங்களில் அல்லது நடைபாதை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள தற்போது ஊட்டி மிஷ்னரி ஹில் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவை அகற்றப்படாத நிலையில், குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, பிளாஸ்டிக் நிறைந்து கிடக்கிறது. அங்குள்ள உணவு கழிவுகளை கால்நடைகள் உட்கொள்வதால், அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மிஷ்னரி ஹில் பகுதியில் சாலையோரத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : area ,Missionary Hill ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...