×

மக்களோடு மக்களா களத்துல இருக்கோம்; 4க்கு 4 ரூம்ல உக்காந்து பாலிடிக்ஸ் பண்ற ஆளுக நாங்க இல்ல: விஜய்க்கு பொளீர் கொடுத்த பிரேமலதா

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தேமுதிக மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பிஎல்ஏ2 மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது:

தேமுதிக கட்சி ராணுவத்திற்கு இணையான கட்சி. கேப்டன் ஒருவர்தான் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கேப்டன்களை உருவாக்கினார். மக்களோடு மக்களாக களத்தில் இருக்கிறோம். 4க்கு 4 அறையில் அமர்ந்து நாம் அரசியல் செய்யவில்லை. ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகும். அதிலிருந்து நான்கிலிருந்து ஐந்து மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும், என்பது அம்மாவாக, அண்ணியாக எனது ஆசை என்றார் பிரேமலதா.

Tags : Premalatha ,Vijay ,PLA2 ,DMDK Central ,Chennai West district ,Ayanavaram, Chennai ,DMDK ,General Secretary ,Treasurer ,L.K. Sutheesh ,Head ,Parthasarathy… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து