×

அரசின் திட்டங்களை மக்களின் இருப்பிடங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தனிகவனம் அமைச்சர் பேச்சு

புதுக்கோட்டை, பிப். 5: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவித்தொகை, காதொலி கருவி, செயற்கை கால், ஊன்றுகோல், மூன்று சக்கர வாகனங்கள், அடையாள அட்டை என பல்வேறு தேவைகளுக்காக தொடர்புடைய அலுவலகத்துக்கு சென்று அணுகி வந்த நிலையை மாற்றி எவ்வித சிரமமும் இல்லாமல் தங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு நடந்த முகாமில் 235 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளித்துள்ளனர். இதில் காதொலி கருவி, அடையாள அட்டை, ஊன்றுகோல், மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று இலுப்பூர் சமுதாய கூடத்திலும், நாளை (6ம் தேதி) விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு முகாம் நடக்கிறது.

Tags : Minister talks ,locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு