ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 22 மீனவர்களை 4 படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்கரை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்
