×

வேன் மோதி வாலிபர் பலி

கோவை, பிப்.19: கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் காஜா உசைன் (46). இவர், கடந்த 16ம் தேதி சுகுணாபுரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காஜ உசைன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காஜ உசைன் பரிதாபமாக இறந்தார்.

Tags : Goa ,Gaja Usain ,Sukunapuram, Goa ,Sukunapuram ,Kaja Usain ,
× RELATED 37 இரு சக்கர வாகனம் மீட்பு