×

மார்க்ஸ், காந்தி, ஜீவாவுக்கு சிலை: தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி நன்றி

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைகால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்று பேரவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பேசியதாவது:

இடதுசாரிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையும், சிபிஐ கோரிக்கையை ஏற்று சிராவயலில் காந்தியடிகள் மற்றும் ஜீவா சிலை நிறுவியதற்காகவும், சேலம் சிறையில் அரசியல் உரிமைகளுக்காக போராடிய தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்ததற்கு தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், கீழ தஞ்சையில் விவசாயிகளுக்கு நடந்த வன்கொடுமைகளுக்கு எதிராக போராடிய தியாகி குப்புசாமிக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Marx ,Gandhi ,Jiva ,Communist Party ,Tamil Nadu government ,Chennai ,Interim ,Budget ,Assembly ,Communist Party of India ,MLA ,Marimuthu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து