×

ஊட்டியில் விரைவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும்: காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு உறுதி

 

சென்னை: சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் ஊட்டியில் விரைவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த கேள்வி நேரத்தின் போது, நீலகிரி கணேசன்(காங்கிரஸ்) பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளதால் அங்கே ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ‘ஊட்டி, கொடைக்காணல் போன்ற சுற்றுலா தளலகளில் சுற்றுலா பயணிகளின் வரத்து என்பது அதிகமாகவே உள்ளது.

அங்கு ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பது என்பது சரியான ஒன்று தான். இருப்பினும் சென்னை, கோவை போன்ற இடங்களில் மல்டி லெவல் கார்பார்க்கிங் கொண்டு வரப்பட்டுள்ள. ஆனால் அது சரியாக வரவில்லை. ஊட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க இடம் தேவை, ஊட்டியில் இடங்களின் மதிப்பீடு அதிகமாக இருப்பதால் நிலம் கிடைக்கும் பட்சத்தில் அங்கு ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Minister ,K. N. Nehru ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Nilgiri Ganesan ,Congress ,
× RELATED வடசென்னை அனல் மின்நிலைய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்