×

கொடுங்குற்ற வழக்குகளில் தண்டனையை குறைத்து இழப்பீட்டை அதிகப்படுத்துவதா?: உயர்நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

டெல்லி : கொடுங்குற்ற வழக்குகளில் தண்டனையை குறைத்து இழப்பீட்டை அதிகப்படுத்தும் போக்குக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பல வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி தண்டனையை குறைப்பது கண்டனத்துக்குரியது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீடு, குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஈடாகாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 2017ல் நடந்த கொலை முயற்சி வழக்கில் தண்டனையை 2 மாதங்கள் என குறைத்து குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Supreme Court ,Delhi ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 6 மாநிலங்களவை...