×

பிரியாணி கடைக்காரரை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது

திருச்சி, பிப். 18:திருச்சியில் பிரியாணி கடைக்காரரை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (53). இவர் திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பிப்.16ம் தேதி அங்கு வந்த மர்ம நபர் அரிவாளை காட்டி பிரியாணி கேட்டு மிரட்டினார். இதுகுறித்து புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து திருவானைக்கோவில் களஞ்சியம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (38) என்பவரை கைது செய்தனர்.

 

Tags : Trichy ,Sakulhameetu ,Tiruvanaikaval Kalanjiyam ,Tiruvanaikaval Trunk Road ,
× RELATED ஆட்டோ திருடியவர் கைது