×

கொளக்காநத்தம் கிராமத்தில் ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம்

பாடாலூர், பிப்.16: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமிற்கு ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் சசிகுமார் தலைமை வகித்தார். முகாமில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் குறைகள், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம்,

முகவரி மாற்றம், செல்போன் எண் சேர்ப்பு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, மின்னணு குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் படத்தை புதுப்பிப்பது, மரணம் அடைந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வது, குடும்ப அட்டைக்கு புதிதாக விண்ணப்பம் செய்வது உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் பாலகுமார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Grievance Redressal ,Kolakkanatham Village ,Patalur ,Tamil Nadu Food Supply and Consumer Protection Department ,Alathur taluka ,Perambalur district ,Alathur Circle… ,
× RELATED 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி...