×

அரசின் இலவச செல்போன் வழங்க கோரி மாற்று திறனாளிகள் திடீர் போராட்டம்

செங்கல்பட்டு: தமிழக அரசு மாற்று திறனாளிகளுக்கு வழங்கும் சிறப்பு செல்போன் கிடைக்காததால்,  மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் முன்பு, நேற்று மாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த  100க்கும் மேற்பட்ட  மாற்று திறனாளிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு நேற்று மாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த  100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் திரண்டனர். அவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு செல்போன் கடந்த ஒரு வருடமாக  பலருக்கு  வழங்கவில்லை. இதனால், 100க்கும் மாற்று திறனாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு அறிவித்தபடி, உடனே தங்களுக்கு அந்த செல்போனை வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் உள்ளே சென்று, மாற்று திறனாளிகள்  அனைவருக்கும் சிறப்பு செல்போன் வழங்குவதாக அரசு அறிவித்தது. ஆனால்,  குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே, செல்போனை வழங்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் எனகூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அவர்களிடம், சமரசம் பேசிய அதிகாரிகள், அரசு அறிவித்த செல்போனை பெறுவதற்கு, மாற்று திறனாளிகளுக்கு குறிப்பிட்ட வயது வரம்பு உள்ளது. குறிப்பிட்ட தொழில் சார்ந்தவர்களுக்கு மட்டுமே செல்போன் வழங்கப்படும் என்றனர். ஆனால், அதிகாரிகளின் கருத்துக்கு  மறுப்பு தெரிவித்த மாற்றுத் திறனாளிகள்,  அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் செல்போன் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரிகளை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம் என கூறி கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : government ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை