×

ஏழுமலையானை தரிசிக்க 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருப்பதி கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 82,337 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,825 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.58 கோடி காணிக்கை செலுத்தினர்.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஏடிஜிஎச் காட்டேஜ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ezhumalaiyan ,Tirumala ,Tirupati temple ,Lord ,Tirupati Ezhumalaiyan ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு...