×

உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் திருமக்கோட்டை அருகே அரசு பள்ளியில் குறுவனம் வளர்ப்புத் திட்டம் துவக்கம்

மன்னார்குடி, பிப்.4: திருமக்கோட்டை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் குறுவனம் வளர்ப்புத் திட்டம் துவங்கப்பட்டு ஒரே நாளில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டது. மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் நத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் குறுவனம் வளர்ப்புத் திட்ட துவக்க விழா நடைபெற்றது. திருமக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா ஜெயசீலன் தலைமை வகித்தார். கோட்டூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிவக் குமார், குமரசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கோட்டூர் ஒன்றியக் குழு தலைவர் மணிமேகலை முருகேசன் கலந்து கொண்டு 600 மரக்கன்றுகளை பள்ளிக்கு வழங்கி குறுவனம் வளர்ப்புத் திட்டத்தை துவக்கி வைத்தார். மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் மரக் கன்றுகளை நட்டு பேசினார். கோட்டூர் ஒன்றிய ஆணையர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன், ஓவர்சீயர் முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர் ரேணுகா வெற்றிவேல் வீரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் கண்ணன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தங்கபாபு, ஜோன்ஸ் ஜன்ஸ்டீன், அமிர்தராஜ், ராஜமாணிக்கம், கவுதமன் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா வரவேற்றார். ஆசிரியை சுபாஷினி நன்றி கூறினார்.

Tags : Thirumakkottai ,Government School ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை