×

லாரி மீது கார் மோதி 3 சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 4 பேர் பலி

தம்தாரி: சட்டீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் சிஆர்பிஎப் மற்றும் அதன் உயர் பிரிவினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் ஜக்தல்பூரில் இருந்து ராய்ப்பூருக்கு விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிஆர்பிஎப்பின் கோப்ரா பிரிவின் நான்கு வீரர்கள் காரில் புறப்பட்டனர். காரை ஓட்டுனர் ஓட்டி வந்த நிலையில் ஜகதல்பூர்-ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.

Tags : Damdari ,CRPF ,Bastar district ,Chhattisgarh ,Cobra ,Jagdalpur ,Raipur ,
× RELATED ஓமன் நாட்டில் வெள்ளபெருக்கில் சிக்கி பாலக்காட்டை சேர்ந்த 2 பேர் பலி