×

மத்திய அரசை கண்டித்து டிஆர்இயூ ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் பிப்.4: கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ) சார்பில் மத்திய அரசு ரயில்வே தனியார் மயத்தை கண்டித்தும், ரயில்வே ஊழியர்களுக்கு டி.ஏ வழங்ககோரியும், மத்திய பட்ஜெட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் அழகிரி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட பொருளாளர் கண்ணன், ஆட்டோ தொழிலாளர்கள் சங்க கவுரவ தலைவர் செந்தில்குமார், அரசு போக்குவரத்து கழக தலைவர் மணிமாறன், இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க இணை செயலாளர் சேகர், அனைத்துதுறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags : DREU ,protest ,government ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!