×

தனியார்மயமாக்க எதிர்ப்பு மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப்.4: தஞ்சையில் மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட கோரி மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தஞ்சை மணிமண்டபம் அருகே மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மின்வாரிய சம்மேளன மாநில துணை தலைவர் பொன்.தங்கவேலு தலைமை வகித்தார். சிஐடியூ மின்வாரிய சம்மேளன மாநில துணை தலைவர் ராஜாராம், தொமுச மின் சம்மேளன இணை செயலாளர் அப்பர்சுந்தரம், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், சிஐடியூ நிர்வாகிகள் காணிக்கைராஜ், அதிதூதர்மைக்கேல்ராஜ், ஆரோக்கியசாமி உட்பட ஏராளமானோர் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மின்சார சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது. அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். பணி ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : protest ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...