×

காத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை, பிப். 4: புதுக்கோட்டை நகரில் திலகர் திடல் அருகே மேல 5ம் வீதியில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 1ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதைதொடர்ந்து நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Kathai Amman Temple Kumbabhishekam ,
× RELATED மாநில அளவிலான தடகள போட்டி துவக்கம்