×

சில்லிபாயிண்ட்…

* இஷான் கிஷண் அதிரடி சாதனை
புதுடெல்லி: நமீபியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷண் 24 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பை டி20 போட்டியில் அரை சதம் விளாசிய, இந்தியாவை சேர்ந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். உலகக் கோப்பை டி20யில், முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்துள்ளார்.

* பாக். போட்டியில் அபிஷேக் சந்தேகம்
புதுடெல்லி: இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, வயிற்று பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் தற்போது அவர் வீடு திரும்பிய போதும், வரும் 15ம் தேதி, கொழும்பு நகரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் அபிஷேக் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. வயிற்று தொற்று பிரச்னையால் அவர் சிறிது எடை குறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

* ஹால் ஆப் ஃபேமில் ரோஜர் பெடரர்
ரோடி ஐலேண்ட்: சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் (44), சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் ஃபேமில் சேர்க்கப்பட உள்ளார். இதற்கான விழா, ரோடி ஐலேண்டில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை காண ரூ. 8000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டபோதும், அதற்கான டிக்கெட்டுகள் இணையதளத்தில் 2 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chillipoint ,Ishan Kishan ,New Delhi ,India ,World Cup T20 ,Namibia ,
× RELATED டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டிகள்!