×

முன்னாள் படைவீரர் துறைக்கு 8 நல அமைப்பாளர்கள் தேர்வு: அமைச்சர் கயல்விழி ஆணை வழங்கினார்

சென்னை: முன்னாள் படை வீரர் நலத்துறைக்கு 8 நல அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கயல்விழி வழங்கினார். முன்னாள் படை வீரர் நலத்துறையில் காலியாக உள்ள 8 நல அமைப்பாளர் பணியிடங்களுக்கு, தகுதி உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்களிடம் இருந்து 887 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 22.1.2026 அன்று இணைய வழி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, தேர்வு குழுவின் மூலமாக 6.2.2026 அன்று நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு 8 நல அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனித வள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று, தேர்வு செய்யப்பட்ட நல அமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். அப்போது பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், அரசு கூடுதல் செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் இயக்குநர், முன்னாள் படைவீரர் நலத்துறை ஆகியோர் உடனிருந்தனர். முன்னாள் படைவீரர் நலத்துறையினை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Ex-Servicemen Department ,Minister ,Kayalvizhi ,Chennai ,Ex-Servicemen Welfare Department ,Minister Kayalvizhi ,
× RELATED சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி...