×

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.13: ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கும் குறைதீர்க்கும் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த மாதத்துக்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags : Srivilliputur ,Srivilliputur Forest Department Office ,Forest Extension Centre Office ,
× RELATED நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு