×

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மறியல் மதுரையில் அரசு ஊழியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு

மதுரை, பிப். 4: தமிழக அரசு சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் தொடர் மறியல், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று 2வது நாளாக மறியல் போராட்டத்திற்காக மாவட்ட செயலாளர் நீதிராஜா தலைமையில், வரைவாளர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். அவர்கள் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்த போது போலீசார் இரும்பு தடுப்பு வேலி அமைத்து மறித்தனர். ஆனால், தடுப்பு வேலியை தள்ளி அரசு ஊழியர்கள் பனகல் சாலைக்கு வந்தனர். அவர்கள் மறியலுக்காக முன்னேறி செல்ல முயன்ற போது போலீசார் தடுத்தனர். இதனால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே அதே இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள் திருவள்ளுவர் சிலை அருகே சாலை ஓரமாக அமரந்து காத்திருப்பு போராட்டத்தை இரவு வரை தொடர்ந்தனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : state employees ,Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை