×

சேமியா நூடுல்ஸ் ரெசிபி

தேவையானவை:

*சேமியா – 1 கப்
*கேரட் – 1
*பீன்ஸ் – 6
*குடமிளகாய் – சிறியதாக 1
*கோஸ் – 50 கிராம்
*பெரிய வெங்காயம் – 1
*பச்சை மிளகாய் – 2
*இஞ்சி – 1 துண்டு
*பூண்டு – 6 பல்
*வெங்காயத் தாள் – ஒருகைப்பிடி
*சோயா சாஸ் – அரை டீஸ்பூன்
*உப்பு – தேவைக்கு
*எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
*மிளகுதூள் – 1டீஸ்பூன்.

செய்முறை:

6 கப் தண்ணீரை கொதிக்கவைத்து சேமியாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளைமெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள் (பூண்டு, இஞ்சி, மிளகாய் உள்பட). எண்ணெயைக் காய வைத்து(புகைய), வெங்காயத் தாள் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேருங்கள். அத்துடன் உப்பு, சோயா சாஸ் சேர்த்து5 நிமிடம் வதக்கி சேமியாவை சேருங்கள். அத்துடன், மிளகுதூள், வெங்காயத் தாள், உப்பு சேர்த்து நன்குகிளறி இறக்குங்கள்

Tags : SAMIA NOODLES ,SEMIA ,
× RELATED வேலென்டைன்ஸ் ஸ்பெஷல்: ரோஸ் ஸ்ட்ராபெர்ரி டெசர்ட்