தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பசுமைத் தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கில், உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த இடம் மாசடைந்துள்ளது; புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல இத்திட்டத்தை அந்நிறுவனம் முன்வைக்கிறது என அரசுத் தரப்பு வாதம். ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், கனிமவளத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
