×

சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: ‘ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும்.. சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும். கூட்டணியில் முறிவு ஏற்படுத்த சிலர் கிளப்பி விடுகின்றனர்’ என இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் முதலமைச்சர் பேசியதாவது; “இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பை உண்மையாக்குவோம். 3% வாக்கு வித்தியாசம் இருந்தாலே பெரும்பாலான இடங்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும். ஆனால், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் 12% வாக்கு வித்தியாசம் உள்ளது.

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும்.. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் ஒன்றிய அரசாலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை.

சட்டமன்றத் தேர்தலை திமுக – காங்கிரஸ் கட்சிகள் இணைந்தே சந்திக்கும். கூட்டணியில் முறிவு ஏற்படுத்த சிலர் கிளப்பி விடுகின்றனர். திமுக – காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. அரசியலை தாண்டி என்னுடைய சகோதரர் போன்றவர் ராகுல் காந்தி.

2021 தேர்தலை விட 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கவுள்ளோம். 2021 தேர்தலை விட 2026 தேர்தல் கடினமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப பேசும் பேச்சு” எனவும் உரையாற்றினார்.

Tags : Assembly ,Dimuka ,Congress ,Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Tamil Nadu ,India ,Today ,TV ,
× RELATED பாஜகவின் டப்பா என்ஜின் முன் திராவிட...