×

ஓசூரில் பஸ் நிலைய கட்டுமான பணிகளால் பத்தலப்பள்ளியில் கடும் போக்குவரத்து நெரிசல்

*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

ஓசூர் : ஓசூரில் பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், பத்தலப்பள்ளியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளி பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதைப்போல அப்பகுதியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையோரம், சர்வீஸ் சாலை தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் அப்பகுதியில் மெதுவாக செல்கின்றன.

இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதே பகுதியில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இதில், மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்கள் சர்வீஸ் சாலை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை ஒரு பகுதியை எதிர்புறமாக வாகனங்கள் வர ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சாலையிலும் வாகனங்கள் தாறுமாறுக நிறுத்தப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், இந்த மார்கெட்டிலிருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது பஸ் நிலைய பணிகள் நடந்து வருவதால், பத்தலப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்வதால், நீண்ட நேரம் வாகனங்கள காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால், தாறுமாறாக வாகனங்கள் சென்று வருகிறது.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் இதை யாரும் கண்டு கொள்வதில்லை. இந்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

அதேபோல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என பலரும் அவதிக்குள்ளாகி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : BATTALAPASOL ,OSUR ,Avati ,Pathalapal School ,Osur Pathalapalli ,Krishnagiri District ,
× RELATED பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல்...