×

மரு கோவை விளம்பர செய்தி

கோவை, பிப்.4: கோவை துடியலூர்  வட்டமலைபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி,  தமிழகத்திலேயே சிறந்த பாலிடெக்னிக் கல்லூரியாக  புதுடெல்லியில் அமைந்துள்ள இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேஷன் என்ற அமைப்பினால் தேர்வு செய்யப்பட்டு 2019ம் ஆண்டிற்கான விருதை பெற்றுள்ளது.

இந்த விருதை ஓசூரில் நடைபெற்ற இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேஷன் 7வது மாணவர் மாநாட்டில் இவ்வமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் பிரதாப்சிங் கக்கசோ தேசாய், தமிழக பிரிவு தலைவர் டாக்டர் சங்கரசுப்ரமணியன் ஆகியோரிடமிருந்து  ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர்  சிவகுமார் மற்றும் எலக்டரானிக்ஸ் கம்யூனிகேஷன்  துறைத்தலைவர்,  ஐ.எஸ்.டி.யின் ஆலோசகருமான வனிதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இக்கல்லூரியில் பயிலும் 3ம் ஆண்டு, இயந்திரவியல் துறை மாணவர் பி.பார்த்திபன், 3ம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை மாணவி எம்.சவுந்தர்யா ஆகியோருக்கு ஐ.எஸ்.டி. சார்பாக மாநில அளவில் சிறந்த மாணவ,மாணவிக்கான விருது வழங்கப்பட்டது. எஸ்.என்.ஆர். சன்ஸ் நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை பாராட்டினர்.

Tags : Maru Coimbatore Advertising News ,
× RELATED பாரதியார் பல்கலையில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு புதிய பாடம் துவக்கம்