×

தமிழ்நாட்டில் 2030ம் ஆண்டிற்குள் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க திட்டம்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: கொத்தடிமை தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், மாநில அளவிலான கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை, தி.நகரில் தொழிலாளார் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றது முதல், 944 தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.2 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Minister ,C.V. Ganesan ,Chennai ,bonded ,day ,Department of Labour Welfare and Skill Development ,Chennai, T. Nagar… ,
× RELATED ‘ஜன நாயகன்’ படத்தில் முக்கிய காட்சிகள் நீக்கம்: இந்த மாதம் ரிலீஸ் ஆகுமா?