×

சொன்னாரு..! செஞ்சாரு..!!நகை கடன் தள்ளுபடி: 11.70 லட்சம் பேர் பயன்

 

சொன்னாரு: 2021 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் பிரதானமான ஒன்றாக ‘கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

செஞ்சாரு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 2021ம் ஆண்டு செப்.13ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் நகை கடன் விலக்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த இரண்டே மாதங்களில் நகை கடன் தள்ளுபடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தகுதி விதிகளை அரசு அறிவித்து செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த 4,000 முதல் 6000 கோடி வரை செலவு தொகை இருக்க கூடும் என மதிப்பிடப்பட்டது.

இந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நிதி சுமையை குறைத்து, வட்டி சுமையை நீக்கி ஆயுள் கடனிலிருந்து லட்சக்கணக்கானோர் விடுவித்தது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பற்ற ஏராளமான ஏழை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த நகைகளை வறுமையின் காரணமாக அடகு வைத்து அதனை மீட்க முடியாத சூழலில் திமுக தேர்தல் அறிவிப்பு முத்தாய்ப்பாய் அமைந்தது.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் கூற்றுப்படி இத்திட்டம் எங்களுக்கு விடிவு காலமாய் இருந்தது என்று தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் பயனாளிகள் நன்றியை தெரிவித்து உள்ளனர்.

Tags : Sonnaru ,Sencharu ,2021 Assembly elections ,DMK ,Tamil Nadu Assembly ,
× RELATED அம்பாசமுத்திரத்தில் பறக்கும் படை...