×

நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி கூடுதல் வாடகைக்கு தனியாரை நாடும் அவலம் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி

தஞ்சை, பிப்.3: தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெருந்திரள் தர்ணா போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால் துவக்கி வைத்து பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபாலன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முறையான ஓய்வூதியம் வழங்கப்படாத அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7, 850 வழங்க வேண்டும். ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் திட்டத்தை கைவிட வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும்.

முடக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கமுடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும். ஒரு மாத ஓய்வூதியத்தை போனசாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் குடும்பநல நிதி 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும், அனைத்து சிகிச்சைகளுக்கான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனமே ஏற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் சித்திக் மற்றும் தர் ஆகியோரின் குழு அறிக்கைகளை வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி, ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், வருவாய் கிராம உதவியாளர் ஓய்வூதியர் சங்கம் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : cancellation ,
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...