×

ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடியில் அமைக்கப்பட்ட டாடா-ஜாக்குவார் தொழிற்சாலை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்: 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் ரூ.9000 கோடியில் அமைக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.  ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்தது. இதனையடுத்து சிப்காட் அமைக்க ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் துறையூர், அகவலம், பெருவளையம், நெடும்புலி ஆகிய கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் 1213.43 ஏக்கர் நிலங்களை பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டது.

இந்தப் பூங்காவில் சிப்காட் நிறுவனம் சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தொழில் நிறுவனத்தை அமைத்துள்ளது. மேலும், இப்பூங்காவில் 300 ஏக்கர் நிலபரப்பில் பெரிய தோல் காலணி மற்றும் துணைப் பொருட்கள் தொகுப்பு அமைக்கப்பட உள்ளது. இதில் 201 ஏக்கர் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த பனப்பாக்கம் புதிய சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து, தொழிற்சாலை அமைக்க 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டு, அந்த இடம் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இடத்தில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கட்டுமான பணிக்கு கடந்த 2024 செப்டம்பர் 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தற்போது, கார் உற்பத்தி தொழிற்சாலையின் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்து உள்ளது. இந்நிலையில், இன்று ராணிப்பேட்டைக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதற்கட்ட கார் உற்பத்தி பணியை தொடங்கி வைக்க உள்ளார். இங்கு ஜாக்குவார், லேண்டர் ரோவர் மற்றும் டாடா தயாரிப்பு கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Tags : Chief Minister ,Tata-Jaguar ,Ranipet ,M.K. Stalin ,Tata Motors ,SIPCOD ,park ,Panapakkam, ,Ranipet district ,Ranipet… ,
× RELATED தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை