கரூர் ஆண்டாங்கோயிலில் வாய்க்காலில் படர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா?

கரூர், பிப். 3: கரூர் ஆண்டாங்கோயில் வழியாக செல்லும் வாய்க்காலில் படர்ந்துள்ள செடிகொடிகள் அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகரட்சிக்குட்பட்ட ஆண்டாங்கோயில் பகுதியில் இருந்து நகரப்பகுதியின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இந்நிலையில், இந்த வாய்க்காலில் அதிகளவு கோரைச் செடிகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் உள்ளதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், விஷ ஐந்துகளின் நடமாட்டமும் அதிகளவு உள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, மக்கள் நலன் கருதி இந்த வாய்க்காலை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More