டெல்லி: கருவை கட்டாயமாக சுமக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெண்ணை அல்லது ஒரு சிறுமியை கட்டாயமாக கருவை சுமக்க உத்தரவிட முடியாது என சிறுமிக்கு 30 வார கருவை கலைக்க உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், குழந்தை பெற்றுக்கொள்ள பெண் விரும்பவில்லையெனில் கோர்ட் அதனைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
விசாரணையின் போது சம்மந்தப்பட்ட சிறுமியின் உடல் மற்றும் மனநலன் முக்கியம் என குறிப்பிட்ட நீதிபதிகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி சிறுமிக்கு பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்களுக்குச் சுதந்திரம் அவசியம். சம்பந்தப்பட்ட பெண் தனது நண்பருடன் விருப்பப்பட்டு உறவு வைத்துக்கொண்டாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இதில் முக்கியப் பிரச்னை என்னவென்றால் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை சட்டப்பூர்வமற்றது மற்றும் தாய் அந்தக் குழந்தையைச் சுமக்க விரும்பவில்லை. பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒரு பெண் தனது கர்ப்பத்தைத் தொடர விரும்பாதபட்சத்தில், நீதிமன்றம் எந்தப் பெண்ணையும் அவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது என கூறியுள்ளது.
