×

கோழி கூவற டைமுல சவுண்டு விடும் சரோஜா அக்கா

அதிமுகவில் சரோஜா அக்கா என்று அன்போடு கட்சியினரால் அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் வளர்மதி, தான் வசிக்கும் தொகுதியிலேயே இந்த முறை தேர்தலில் நிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தொகுதி மக்களை ரொம்ப நாளுக்கு அப்புறம் பார்க்குறதுனால கொஞ்சும் ஓவரா பில்டப் பண்ணிட்டு இருக்காங்க… அவர் நடத்தும் தேர்தல் பிரசாரம் கூத்துதான் அந்த தொகுதி மக்களிடையே இப்போ ஹாட் டாப்பிக்காக இருக்கு..

அந்த கூத்த நீங்களே கேளுங்க… அவர் வசிக்கும் வீட்டு பக்கத்துலேயே உள்ள 2 தெருவ சுற்றி சுற்றி வர்றாரு. அதுவும் கோழி கூவுல நேரத்துல எல்லாரும் தூங்கு நேரமா பார்த்து விடியற்கால 3 மணியில் இருந்து 5 மணி வரை சுமார் 2 மணி நேரம் பிரசாரமுன்னு ஒன்னு பண்ணறாரு… ஆனால் அது பிரசாரம் இல்லையாம்… அவருக்கு சுகர் அதிகம் இருக்குறதுனால நைட்டு தூக்கம் வரலையாம்… அதான், கோழி கூவுறதுக்கு முன்னாடியே வீட்டில் பணியாற்றும் ஊழியர்களை தொந்தரவு செய்து அவர்களையும் தூங்க விடாம தெரு தெருவா வாக்கிங் கூட்டிட்டு போறாங்க…

ஆனா, அவர் வாக்கிங் போகும்போது சாலையில் மரம் ஆடும் சத்தம் மட்டும்தான் கேட்குது… மக்களுடையே குரலே கேட்கல… ஆனா, நான் வாக்கிங் செல்லும் போது பிரசாரத்தை தொடங்கிட்டேன் என்று கட்சியின் தலைமைக்கு தெரியப்படுத்தணும்னு ‘கரகாட்டக்காரன்’ படபாணியில் வளர்மதி ஒன்னு ரெடி பண்ணி இருக்காங்க…

அது ஹைலைட்… ‘யானை வரும் முன்னே..மணி ஓசை வரும் பின்னே…’ என்று சொல்வதுபோல், வளர்மதியே ஒரு ஆள ரெடி பண்ணி, அவர் நடந்து போறப்போ, விடியற்காலையிலே வேலைக்கு போகும் சிலர் சந்தித்து பேசுவது போல பின்னாடி இருந்து வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் போடுறாங்க… நானும் தேர்தலுக்கு தயாராகிவிட்டேன் என்று ‘அலப்பறை அஜிதா போல்… ஆளு இல்லாத கடையில் டீ ஆத்துகிறார் முன்னாள் பெண் அமைச்சர்.

Tags : Saroja Akka ,Former ,Valarmathi ,AIADMK ,
× RELATED கிணற்றில் கார் கவிழ்ந்து உயிரிழந்த 4...