×

தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம்; கணவனை அடித்து கொன்று வாய்க்காலில் வீசிய மனைவி: கள்ளக்காதலனுடன் கைது

திருவாரூர்: கள்ளக்காதலை கண்டித்த கணவனை அடித்து கொன்று வாய்க்காலில் வீசிய 2வது மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலிவலம் கீராந்தி அடப்பாறிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் தண்ணீரில் கடந்த 2ம் தேதி தலையில் ரத்த காயத்துடன் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்தவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பொன்னிரையை சேர்ந்த சுப்பிரமணியன்(50) என்பதும், ஓட்டல் நடத்தி வந்த அவர் நஷ்டத்தால் ஓட்டலை மூடி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

அவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி லட்சுமிக்கு குழந்தை இல்லை. 2வது மனைவி இந்திராவுக்கு(45) 12, 4 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை லட்சுமி வளர்த்து வருகிறார். லட்சுமி திருத்துறைப்பூண்டியில் தனியாக வசித்து வருகிறார். சுப்பிரமணியனை 2வது மனைவி இந்திரா கள்ளக்காதலன் மூலம் அடித்து கொன்று வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து இந்திராவை பிடித்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவருக்கும், மாமா உறவு முறையான பூஞ்சையூர் குடியான தெருவை சேர்ந்த பால் வியாபாரி சந்திரசேகருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது தெரிந்த சுப்பிரமணியன் இருவரையும் கண்டித்தார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சுப்பிரமணியனை தீர்த்து கட்ட சந்திரசேகரும், இந்திராவும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2ம் தேதி சந்திரசேகர், சுப்பிரமணியனுக்கு மது வாங்கி கொடுத்தார். இருவரும் சுப்பிரமணியன் வீட்டிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள வாய்க்கால் அருகே உட்கார்ந்து மது குடித்தனர். அப்போது சுப்பிரமணியனுக்கு போதை தலைக்கேறியதும் சந்திரசேகர் கட்டையை எடுத்து அவரை தலை மற்றும் பல இடங்களில் சரமாரி தாக்கினார். இதனால் அவர் இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை வாய்க்காலில் வீசி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சந்திரசேகர், இந்திராவை நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். சந்திரசேகருக்கு மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

Tags : Thiruvarur ,Alivalam Kiranti Dam ,Thiruthurapundi, Thiruvarur District ,
× RELATED பள்ளியாடி கத்திக்குத்து சம்பவத்தில்...