×

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, பிப். 3:   புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் நாளில் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்ஆர்பி., செவிலியர்கள், பண்ைண பணியாளர்கள் ஆகிேயாருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் ெபறுவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்கிட வேண்டும். எம்ஆர்பி., செவிலியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கிட வேண்டும். மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்க அறிவித்த அரசாணையை அமல்படுத்திட வேண்டும்.   மேலும் கொேரானா பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் அரசு ஊழியர்கள் ஏடிசி., பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாநில செயலாளர் பரமேஷ்வரி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிசந்திரன், சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோ மற்றும் சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Demonstration ,cancellation ,government employees ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்