×

உள்ளாட்சி கடை வியாபாரிகள் தி.மு.க. மாவட்ட செயலாளரை சந்தித்து மனு

ஊட்டி, பிப். 3:  ஊட்டியில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை, உள்ளாட்சி கடை வியாபாரிகள் பொதுநலசங்க மாநில தலைவர் பரமேஸ்வரன், மாநில பொதுச்செயலாளர் ரகீம், ஊட்டி நகர வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா, செயலாளர் ரவிகுமார், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் இச்சுபாய், ஊட்டி நகர வியாபாரிகள், சங்க துணை செயலாளர்கள் குலசேகர், அக்பர்அலி, ஜபருல்லா ஆகியோர் வியாபாரிகளுடன் சந்தித்து, 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியாகவுள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சி கடை வியாபாரிகளை பாதுகாக்கின்ற வகையில் தேவையான அம்சங்களையும் இணைத்து வெளியிடவேண்டும் எனக் கூறி கோரிக்கை மனு வழங்கினர்.

Tags : shopkeepers ,District Secretary ,
× RELATED தி.க. மாவட்ட செயலாளருக்கு மிரட்டல்: 2 பேர் கைது