- தமிழ்நாடு அரசு
- நீலகிரி மாவட்டம்
- சென்னை
- குந்தா
- பண்டலூர்
- நீல்கிரி மாவட்டம்
- உத்தகை ஊராட்சி ஒன்றியம்
- குந்தா உராடச்சி யூனியன்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியீடு. உதகை ஊராட்சி ஒன்றியத்தில் 38 கிராம ஊராட்சிகள் இருந்த நிலையில், 12 ஊராட்சிகளைப் பிரிந்து குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கபட்டுள்ளது. அதேபோல, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்த 22 ஊராட்சிகளில், 13 ஊராட்சிகளைப் பிரித்து பந்தலூர் ஒன்றியம் உருவாக்கபட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் 6 வாரங்களுக்குள் தெரிவிக்கலாம்.
உதகமண்டலம் ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு குந்தா ஒன்றியமும், கூடலூர் ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு பந்தலூர் ஒன்றியமும் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பிரிவின் மூலம் நீலகிரியில் உள்ள கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை, 35-லிருந்து 96-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான நிலப்பரப்பு, சிதறிக் கிடக்கும் குடியிருப்புகள் மற்றும் நிர்வாக வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிகளில் 424 குக்கிராமங்கள் உள்ளன. உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம் மலைப்பகுதிகளாக இருப்பதாலும் போதுமான சாலை வசதி இல்லாததாலும் மற்றும் குக்கிராமங்கள் அதிக அளவில் இருப்பதாலும் ஒன்றிய அலுவலகத்தை அணுகுவதற்கு கிராம மக்களுக்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தாலும் உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி இரண்டு ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளில் 343 குக்கிராமங்கள் உள்ளன. கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மலைப்பகுதிகளாக இருப்பதாலும் போதுமான சாலை வசதி இல்லாததாலும் மற்றும் பல குக்கிராமங்கள் இருப்பதாலும் ஒன்றிய அலுவலகத்தை அணுகுவதற்கு கிராம மக்களுக்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தாலும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 13 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி இரண்டு ஊராட்சி ஒன்றியங்களாகப் பிரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் குந்தா ஊராட்சி ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி மற்றொரு புதிய ஊராட்சி ஒன்றியமாகப் பிரித்திடவும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி அதில் 13 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி மற்றொரு புதிய ஊராட்சி ஒன்றியமாகப் பிரித்திடவும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பரிந்துரை செய்து உரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பி உரிய ஆணை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து, அதனை ஏற்க முடிவு செய்து, நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா என்ற புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கியும் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் மற்றும் 13 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி பந்தலூர் என்ற புதிய ஊராட்சி ஒன்றியமாக உருவாக்கியும் அரசு ஆணையிடுகிறது.
